குரங்கம்மைத் தொற்று.. அதன் அறிகுறிகள் என்னென்ன?
ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அது இன்னும் பல நாடுகளுக்குப் பரவி அனைத்துலக அளவில் குரங்கம்மைத் தொற்று பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சம் நிலவுகிறது.
குரங்கம்மைத் தொற்றின் அறிகுறிகள்..
– காய்ச்சல்
– சளி
– தசை வலி
– தலைவலி
– முதுகுவலி
– சோர்வு
– உடலில் அரிப்பு (முதலில் புள்ளி புள்ளியாக அம்மை வரும். பிறகு நீர் நிறைந்த கொப்பளமாக மாறும். அது வடுவாக மாறும்.)
2 வகையான வடுக்கள் உள்ளன. அவை “Clades” என்று அழைக்கப்படும்.
Clade I – காங்கொ பேசின்
Clade II – மேற்கு ஆப்பிரிக்கா
இரண்டுமே உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம். ஆனால் Clade I இன்னும் அதிகமான மரணங்களை ஏற்படுத்தியுள்ளதாக வரலாறு சொல்கிறது.
தொற்று எப்படிப் பரவும்?
– தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது (எச்சில், சுவாசக்காற்று)
– பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களில் கிருமி இருக்கும் வாய்ப்புள்ளது. அப்போது அந்தப் பொருள்களைப் பயன்படுத்தினால் நோய்த்தொற்று பரவலாம்.
– தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கின்மூலம் தொற்று பரவலாம்.