இந்தியா முழுவதும் மருத்துவச் சேவையில் தடை – வேலைக்குத் திரும்பும்படி கேட்டுக்கொள்ளும் அரசாங்கம்.
இந்தியாவில் மருத்துவர்களின் 24 மணி நேர வேலை நிறுத்தம் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.
மருத்துவத் துறை ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும்படி இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மருத்துவச் சேவைகள் இந்தியா முழுதும் தடைபட்டுள்ளன.
சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்களுக்கான பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்தது.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்முறையால் கொல்லப்பட்ட சம்பவம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவச் சங்கங்களின் பிரதிநிதிகளும் அரசாங்க அதிகாரிகளும் சந்தித்துப் பேசினர்.
அதையடுத்து சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராயக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்தது. அரசாங்கத்தின் பரிந்துரைகளை ஆராய்வதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது.