லண்டனின் விலை மதிப்புமிக்க ஓவியங்கள் நிறைந்த Somerset House பழங்காலக் கட்டடத்தில் தீ.
லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க Somerset House கலாசார நிலையத்தில் நேற்று (17 ஆகஸ்ட்) தீ மூண்டது.
அதை அணைக்கும் பணியில் சுமார் 25 தீயணைப்பு வாகனங்களும் 125 தீயணைப்பாளர்களும் ஈடுபட்டதாக லண்டன் தீயணைப்புத் துறை X பக்கத்தில் தெரிவித்தது.
தேம்ஸ் (Thames) நதியோரத்தில் சுமார் 180 மீட்டர் தூரத்துக்குப் புகை சூழ்ந்திருப்பதை இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன.
ஊழியர்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
1796ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது அந்தக் கட்டடம். தீ ஏற்பட்டதால் கட்டடம் மூடப்படும் என்று தீயணைப்புத் துறை பதிவிட்டிருந்தது.
கட்டடத்தின் கூரையில் தீ மூண்டதாக அது சொன்னது.
அங்கு பல விலைமதிப்புள்ள ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
வின்சென்ட் வான் கோவின் (Vincent Van Gogh) பிரபல “Self-Portrait with Bandaged Ear” அவற்றுள் ஒன்று.