நான் ஜனாதிபதியானதும் ஜனாதிபதி பதவியை ஒழிப்பேன்
தான் ஜனாதிபதியான பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.