மருத்துவர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்”: இந்திய அரசு உறுதி
இந்திய அரசாங்கம் மருத்துவர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் தேவை என்று ஆராயவிருக்கிறது.
அதற்கென ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று அது உறுதியளித்தது.
கொல்கத்தாவில் பயிற்சி-மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் மேற்கொண்ட நாடுதழுவிய 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை ஆறு மணிக்கு முடிவடைந்தது.
பயிற்சி மருத்துவரின் கொலை தொடர்பாக ஒருவர் கைதாகியிருக்கிறார். ஆனால் சம்பவத்தில் ஒருவருக்கு மேல் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்திய மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணையை நடத்துகிறது.