சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு அரசு வீடுகள்
சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டத் தொடரின் மற்றுமொரு படியாக வீடற்ற உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்கும் , தற்போதுள்ள வீடுகளின் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கும், சிவில் பாதுகாப்புப் படைக்கு தேவையான தொழிலாளர் பங்களிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முதல் கட்டமாக 100 உறுப்பினர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இங்கு அறிவித்துள்ளார்.
சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது உள்ள ரூ. 350 தினசரி ரேஷன் உதவித்தொகையை ரூ. 500 ஆக உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது.