பெண் பத்திரிக்கையாளர் Salma al-Qadoumiயை இஸ்ரேல் ராணுவம் சுட்டது (Video)
காஸா பகுதியில் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்த சல்மா அல்-கதூமி (Salma al-Qadoumi) என்ற ஊடகவியலாளர் கான் யூனிஸின் பகுதியில் பின்னால் வந்த இஸ்ரேலியப் படைகள் சுட்டதாக அல்ஜசீரா செய்திச் சேவை கூறுகிறது.
இஸ்ரேலியப் படைகள் வேண்டுமென்றே அவருயும் குழுவையும் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும் செய்திச் சேவை தெரிவிக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவரும் , ஏனையோரும் தேரா எல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கான் யூனிஸில் உள்ள ஹமாத் குடியிருப்பு வளாகத்தை இஸ்ரேலியப் படைகள் டாங்கிகள் மற்றும் ஷெல் தாக்குதல்களைப் பயன்படுத்தி தாக்கிய போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.