கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஓட்டோ சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருப்பிட்டிய பிரதேசத்தில் ஓட்டோக்களைப் பழுது பார்க்கும் இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
45 வயதுடைய ஓட்டோ சாரதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்ல, தலங்கம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கடனாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு அந்தப் பணத்தைத் திருப்பித் தராததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.