அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு.

நுவரெலியாவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேற்படி பெண் நேற்று மாலை நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள வீதியோரத்தில் கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் 1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்குத் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற மருத்துவ உதவி அதிகாரிகள் அந்தப் பெண் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
அந்தச் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சடலம், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.