இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதோடு பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று (20) காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நில அதிர்வு ஏழு நிமிட இடைவெளியில் 4.9 மற்றும் 4.8 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணிகள்
இதனால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளதுடன் நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்துள்ள நிலையில், அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.