வங்கதேச இடைக்கால அரச நிர்வாகம் சரிந்தது.
ஷிக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி வங்கதேசத்தில் இடைக்கால அரசை அமைத்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.
ஆனால் இப்போதும் கூட நாட்டின் நிர்வாக விவகாரங்கள் குழப்பமான நிலையிலேயே இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அரசு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக கீழ்நிலை ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஊழல் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
இந்நிலைமையால் பொதுமக்கள் தமது சேவைகளை வழங்குவதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அரசின் உயர் அதிகாரிகளும் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.