காஸ்-டெலிபோன் மலையக எம்.பி.க்கள் விவாதத்தின் போது கைகலப்பு (Video)
சக்தி தொலைக்காட்சியில் நேரடி விவாதத்தின் போது இரண்டு தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பி.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இந்த உரையாடலின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் விளைவாகவே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
முதலில் இருவரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர், பின்னர் அது கைகலப்பாக மாறியது.
தொலைக்காட்சி சேனலின் ஊழியர்கள் தலையிட்டு இருவரையும் கட்டுப்படுத்தினர், மோதல் காரணமாக நிறுவனத்தின் பொருட்களும் சேதமடைந்தன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு திகாம்பரம் ஆதரவளிப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வேலுகுமார் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.