உலகிலேயே மிக நீளமான முத்திரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான நினைவு முத்திரை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த முத்திரை 205 மில்லிமீற்றர் நீளமானது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தலதா மாளிகையின் பெரஹெராவை மதம் சார்ந்த ஆசியாவின் உயர் நிகழ்வாக உலகின் முன்பாக அடையாளப்படுத்துவதற்கான அரச அனுசரணையை வழங்குவதாக உறுதியளித்தார்.
பெரஹெராவை ஏற்பாடுச் செய்தமைக்காக சகலருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அதனை தேசிய கலாசார நிகழ்வாக மாத்திரமின்றி, இலங்கையின் தனித்துவமான கலாசார அம்சமாக உலகுக்குக் கொண்டு செல்வதோடு, அதனைப் பாதுகாத்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியதும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.