இந்தியாவில் மருத்துவர்களுக்கான தேசியப் பணிக்குழுவை அமைக்க உத்தரவு.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மருத்துவர்களுக்கான தேசியப் பணிக்குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டிருக்கிறது.
வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான பரிந்துரைகளைப் பணிக்குழு முன்வைக்கும்.
மருத்துவர்களுக்கான வேலையிடச் சூழல் முற்றாகச் சீரமைக்கப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொல்கத்தாவில் 33 வயது பயிற்சிமருத்துவர் கொல்லப்பட்டதை அடுத்து, நாடுதழுவிய போராட்டங்கள் நடந்தன.
பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றியஅறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
கடந்த வாரம், வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றிவிடப்பட்டது.
வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வழக்கு விசாரணை இம்மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.