அரகலயவின் போது நாட்டைக் பொறுப்பேற்பதாக கோட்டாவுக்கு அனுர கடிதம் ஒன்றும் அனுப்பவில்லை : சுகிஸ்வர பண்டார.

2022ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டை ஆட்சி செய்யக் கோரி கடிதம் அனுப்பியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்து அடிப்படையற்றது என கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகிஸ்வர பண்டார வலியுறுத்தியுள்ளார்.

7வது நிறைவேற்று ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் என்ற வகையில், 2022 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கூறியது போன்ற கடிதம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கவில்லை.

ஊடகங்களுக்கு விசேட கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படையற்ற இந்தக் கூற்றை அவமதிப்புடன் கண்டிப்பதாகக் கூறும் சுகிஸ்வர பண்டார, முடிந்தால் அந்தக் கடிதத்தை முன்வைத்து, அது யாருக்கு வழங்கப்பட்டது என்பதைத் தெரிவிக்குமாறு சவால் விடுவதாகவும் கூறுகிறார்.

இந்த நெருக்கடியை தீர்க்க தேசிய சக்தி தயாராக இருப்பதாகவும், அதற்கான அதிகாரம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மே மாதம் 12ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும், ஆனால் அவ்வாறானதொரு கடிதம் கிடைக்கப்பெற்றது என்றோ அல்லது அதற்கு பதிலோ கிடைக்கவில்லை என அனுரகுமார திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை தொடர்பாகவே கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகிஸ்வர பண்டார மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.