வட மாகாண பாடசாலை ரீதியிலான குத்துச் சண்டைப் போட்டியில் மன்னார் மாணவன் சாதனை.
வடக்கு மாகாண, பாடசாலை ரீதியான,20 வயதுப் பிரிவு, குத்துசண்டைப் போட்டியில் பங்கு பற்றிய,மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய மாணவன் விஜிதன் கபிலன் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தற்போது மாகாண மட்ட, பாடசாலை ரீதியான மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெற்ற வருகின்ற நிலையில்,
கடந்த 17 மற்றும் 18 ம் திகதிகளில் முல்லைத்தீவில் நடைபெற்ற மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியிலேயே குறித்த விஜிதன் கபிலன் பங்கு பற்றி முதலாம் இடத்தை பெற்றுச் சாதித்துள்ளார்.