எம்.பி பதவியை ராஜினாமா செய்த தலதா.. ரணிலுக்கு நன்றி தெரிவித்தார்.

SJB இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள , தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், SJB கட்சியில் இருந்தும் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச போன்று ரணில் விக்கிரமசிங்க தன்னை நிரூபித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச SJBயை அமைப்பதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிரானவள் என்றும் சஜித் பிரேமதாச அரசியல் ரீதியாக தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.