SJB-NPP , MPக்கள் தெரண நேரலையில் கழுதை என கடும் வாக்குவாதம் (வீடியோ)
நேற்றிரவு தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘வாத பிட்டிய’ நிகழ்ச்சியின் போது, SJB மற்றும் NPP பிரதிநிதிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மஹிந்த ஜயசிங்கவிற்கு எதிராக ஹேஷா விதானகே குற்றச்சாட்டை முன்வைத்தபோதே, SJB சார்பில் பிரசன்னமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, NPP மஹிந்த ஜயசிங்கவை பார்த்து 20 ஆண்டுகளாக , அரச சம்பளத்தை வாங்கிக் கொண்டு எந்தப் பாடசாலையிலும் கற்பிக்கவில்லை என சொன்ன போது , இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஆரம்பமானது.
தாம் எந்தவொரு சட்டவிரோதமான செயற்பாட்டையும் செய்யவில்லை எனவும், இந்த நாட்டின் அரசியலமைப்பின் கீழ் தொழிற்சங்க உரிமைகளை மட்டுமே அனுபவித்துள்ளதாகவும் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வாக்குவாதம் தீவிரமடைந்தபோது, மஹிந்த ஜயசிங்க, ஹேஷா விதானகேவை கழுதை என திட்டினார். விவாதம் கைகலப்பின்றி சமரசமானது.