இராஜாங்க அமைச்சராக இன்று பதவியேற்றார் வடிவேல் சுரேஷ்.

தாம் தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் தாம் இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றார் என்று அவர் மேலும் மேலும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.