தலதாவின் தாக்குதலால் SJBக்குள் பெரும் வெடிப்பு : சிறு கட்சிகளும் பின்வாங்குகின்றன.

SJB நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தலதா அத்துகோரள கட்சியையும், கட்சித் தலைவரையும் விமர்சித்து தனது உறுப்புரிமையையும், பாராளுமன்ற ஆசனத்தையும் கைவிட்டதையடுத்து, கட்சிக்குள் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

தலதா அத்துகோரள பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுததோடு, கட்சியின் போக்கிலும் , சஜித் பிரேமதாசவின் சில செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இன்னும் சில தினங்களுக்குள் அக்கட்சியின் பலமானவர்கள் சிலர் தமது பதவிகளை விட்டு விலகுவார்கள் அல்லது அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவார்கள் என அக்கட்சியின் உட்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

அக்கட்சியுடன் தொடர்புடைய சிறுபான்மை அரசியல் கட்சிகளும் தற்போதைய நிலைமையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றதுடன் , சஜித் பிரேமதாசவிற்கு பாதகமான சூழல் ஏற்பட்டால் தமது அரசியல் நிலைப்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய தயாராக உள்ளனர்.

கட்சித் தலைவர்கள், கட்சிகளின் மற்ற முக்கிய தலைவர்களுடன் இன்று பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இதேவேளை, கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என சந்தேகத்திற்குரிய எம்.பி.க்களுடன் மேலும் நட்புறவைப் பேணுவதற்கு இன்று பிற்பகல் கட்சித் தலைமை அதிக ஆர்வத்துடன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.