உல்லாசப் படகு மூழ்கிய சம்பவத்தில் காணமற்போன 6 பேரில் ஐவரின் உடல்கள் மீட்பு.

இத்தாலி அருகே மூழ்கிய பிரிட்டிஷ் உல்லாசப் படகில் காணாமற்போன ஆறு பேரில் ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
பிரிட்டிஷ் செல்வந்தர் மைக் லின்ச் (Mike Lynch) உள்ளிட்ட ஆறு பேரைக் காணவில்லை என்று முன்பு தெரிவிக்கப்பட்டது.
உல்லாசப் படகு எப்படி மூழ்கியது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
திடீர் என்று எழுந்த பேரலையால் உல்லாசப் படகு மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது.
15 பேர் மீட்கப்பட்டனர். ஏற்கெனவே ஒருவர் மாண்டுவிட்டார்.
‘Bayesian’ என்ற அந்தப் பிரிட்டிஷ் உல்லாசப் படகு 56 மீட்டர் நீளம்கொண்டது.