இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன Fatah அமைப்பின் மூத்த தளபதி பலி.

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன ஃபாத்தா (Fatah) அமைப்பைச் சேர்ந்த மூத்த தளபதி கலீல் மாக்தா (Khalil Maqdah) கொல்லப்பட்டார்.
10 மாதப் போரில் ஃபாத்தா அமைப்பின் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது.
மத்திய கிழக்கில் பெரிய போர் வெடிக்கலாம் என்ற அச்சம் வலுவடைகிறது.
பெரிய போரை இஸ்ரேல் நாடுகிறது என்பதற்கு இதுவே சான்று என்று ஃபாத்தா அமைப்பு கூறியது.
கலீல் மாக்தாவின் சகோதரர் முனீர் மாக்தாவைக் (Mounir Maqdah) குறிவைத்துத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.
லெபனானில் ஃபாத்தா ஆயுதப் பிரிவின் கிளைக்கு முனீர் தலைமையேற்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.