ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் , ஒரு நாளைக்கு 6 கோடி செலவு செய்ய அனுமதி!

Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்துப்படி, ஒரு வேட்பாளர் தோராயமாக ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் செலவு செய்ய அனுமதி உண்டு எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள செலவீனச் சட்டத்தில் நாள்தோறும் அதிக அளவில் பணம் செலவழிக்க ஏற்கனவே அனுமதி உள்ளதால், அதனைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.