எதிர்க்கட்சியில் இருந்து தாவுவோருக்கு 30கோடி : சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு.
எதிர்க்கட்சித் தலைவரும், SJBயின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒதுக்கப்படும் பணத்தை தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த ஆயத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சியில் இணையும் எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.