இந்தியப் பேருந்து ஒன்று நேப்பாளத்தில் உள்ள ஆற்றில் விழுந்ததால் 14 பேர் பலி.
நேபாளத்தின் பொக்காரா (Pokhara) நகரிலிருந்து தலைநகர் காட்மாண்டுக்கு (Kathmandu) அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த, இந்தியப் பேருந்தில் சுமார் 40 பேர் பயணம் செய்ததாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்கின்றன.
தனஹுன் மாவட்டத்தில் உள்ள மா்சயங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது.
விபத்துக்கான காரணமும் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களும் உறுதிசெய்யப்படவில்லை.
இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பேருந்து பதிவுசெய்யப்பட்டிருந்தது.
நேப்பாள ராணுவ ஹெலிகாப்டரில் மருத்துவக் குழு விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.
பொக்காராவிலிருந்து காட்மாண்டு செல்லும் வழி இந்தியச் சுற்றுப் பயணிகளிடம் பிரபலமானது.
சாலைகள் சரியாகப் பராமரிக்கப்படாதது, குறுகலான மலைப்பாதைகள் முதலியவற்றால் நேப்பாளத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும்.