ஜனாதிபதிக்கு அர்ச்சுனா கடிதம் ? அவராக ஜனாதிபதியை சந்திக்கிறாரா? அவரை ஜனாதிபதி சந்திக்கிறாரா?
வைத்தியர் அர்ச்சுனா ஜனாதிபதிக்கு எழுதிய ஆங்கில மடலும் , அவரே மொழி பெயர்த்து வெளியிட்ட தமிழ் மொழி பெயர்ப்பும் வெளியாகி உள்ளன.
அவை கீழே ,
வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா
வைத்திய நிர்வாகி
ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி
2024.08.23
மதிப்பிற்குரிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு
தமிழ் முஸ்லிம் மக்களுடைய வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதிநிதித்துவம்
தாங்கள் என்னை அழைத்ததற்கான தமிழ் முஸ்லிம் பிரதிநிதியாக கருத்தில் கொண்டமைக்கான முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.
எனது பெயர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா. நான் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் மருத்துவ நிர்வாகியாக கடமையாற்றுகின்றேன். நான் இலங்கையில் பிறந்த ஒரு தமிழன். 1986 ஆம் ஆண்டு முக்கியமான இனப்பிரச்சனையின் போது யாழ்ப்பாணத்தில் நான் பிறந்தேன். எனது வாழ்க்கை வரலாற்றில் என் கண்கூடாக தமிழ் முஸ்லிம் சமுதாயம் மற்றும் சிங்கள சமுதாயம் பட்ட துன்பங்களை இந்த 30 வருட வரலாற்றில் நான் கண்ணால் கண்டிருக்கின்றேன்.
தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கான பிரதிநிதியாக என்னை தாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறீர்கள். தமிழர்கள் எனப்படும் போது இலங்கைத் தமிழர்களும் இந்திய வம்சாவளி தமிழர்களையும் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
ஆனால் ஒட்டுமொத்த ரீதியில் தமிழராக தமிழ் மொழி பேசும் இனமாக முஸ்லிம் மற்றும் தமிழினத்தை நான் பிரதிநிதித்துவப் படுத்த விரும்புகின்றேன்.
இதற்குப் பிறகும் நாங்கள் மொழி சார்பாகவும் மதம் சார்பாகவும் இந்த தாய் திருநாட்டில் பிரிந்து நிற்க விரும்பவில்லை. எமது தாய் நாட்டை பிடித்திருந்த மொழி இனம் சார்ந்த தொற்று நோயை அகற்றுவதற்குரிய மிகச் சிறந்த காலம் கனிந்து உள்ளது என நாங்கள் கருதுகிறோம். அதற்குரிய மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அண்மையில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் எமது நாட்டை நீங்கள் மீட்டெடுத்த விதமே ஆகும்.
தங்களுக்கு உரிய மேலத்திய நாடுகளில் உள்ள ஆதரவு மற்ற முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர்களை விட மிகவும் உச்சமானது என்பதை எமது சமூகம் நன்கு அறியும். தங்களுக்குரிய பாணியில் எமது சமுதாயத்தை கட்டி எழுப்பும் தங்களுடைய நல்ல நோக்கம் தங்களுக்கு வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் நல்லதொரு பயனை தரும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் இஸ்திரம் அற்ற நிலையம் நாட்டை மீட்டெடுக்க முடியாதவாறு திட்டமிட்ட ரீதியில் செய்யப்பட்ட பொருளாதார நெருக்கடிகளும் அவற்றுக்கான முக்கியமான காரணங்களாக தமிழ் முஸ்லிம் மக்களுடைய கருத்துக்களை பெரும்பான்மையினம் புறந்தள்ளி வந்தது என்பது ஒரு கண் கூடு. எங்களுடைய மக்கள் இது சம்பந்தமாக மிகத் தெளிவான ஒரு கருத்தை கொண்டுள்ளார்கள் அது தவிர எமது மக்கள் அரசியலில் மிகவும் தேவையான ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்து உள்ளார்கள் என்பது தங்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.
எங்களுடைய கருத்தை நாங்கள் முன்வைக்கும் போது நாங்கள் எமது நாட்டை இரண்டாகவோ மூன்றாகவோ மொழி அடிப்படையிலோ மதம் அடிப்படையிலோ பிரிக்க விரும்பவில்லை என்பதை தங்களுக்கு முதல் தடவையாக கூறிக் கொள்ள விரும்புகின்றோம். பிளவுபடாத ஒன்றுபட்ட நாடு என்பது தமிழ் முஸ்லிம் சமூகமாகிய நாங்கள் எங்கள் மனதில் பதித்துக் கொண்டோம். மேலும் சிங்கள மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் நாங்கள் நன்கு அறிவோம் அதேபோல் தமிழ் முஸ்லிம் சமூகமாகிய எங்களது கலாச்சாரமும் மதிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஒரு குரலில் உள்ளோம்.
தற்போதைய நிலைமையில் எங்களுடைய முக்கியமான கோரிக்கைகள் ஆவன,
1. வடக்கு கிழக்கு மீளமைப்பு
போரால் பாதிக்கப்பட்ட எமது தமிழ் முஸ்லிம் சமூகத்தின் உடைய மீளமைப்பும் எங்களுடைய சுதந்திரப் போராட்ட போராளிகளின் வாழ்வாதார மீளமைப்பும் முக்கியமானவை. எங்களுடைய இதயத்தில் உள்ள வடுக்களை ஆற்ற வேண்டுமானால் முதலாவதாக பாதிக்கப்பட்ட எங்களது சகோதர சகோதரிகளின் வாழ்வாதாரம் மீள அமைக்கப்பட வேண்டும்.
2. சமமான உரிமைகள்
தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்குரிய உரிமைகள் சிங்கள சமூகத்திற்குரிய உரிமைகளாக சமமாக மதிக்கப்பட வேண்டும். எங்களுடைய எதிர்கால சந்ததி எந்த விதத்திலும் முஸ்லிமாகவோ தமிழாகவோ புறந்தள்ள படக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் கரிசனையோடு உள்ளோம்.
3. புலம்பெயர்ந்த தமிழர்கள்
எங்களுடைய புலம்பெயர்ந்த தமிழ் சகோதர சகோதரிகள் மீண்டும் எங்களுடைய தாயகத்துக்கு வந்து போவதற்குரிய எந்தவித தடையும் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். முழுமையான இலங்கையாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு எங்களால் ஆன பங்களிப்பை செய்வதை எங்களது முதற்கண் கடமையாக நாங்கள் கருதுகிறோம். அவ்வாறே அபிவிருத்தி இலங்கை குரியதாக அமைய வேண்டும் என்பது எங்களது கருத்தாகும். ஐக்கிய இலங்கைக்குள் மூவினமும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இடமில்லை என்பதையும் பிரிவினை வாத எந்த கோரிக்கையும் எங்களால் இனிமேல் வைக்கப்படாது என்பதையும் நாங்கள் தெளிவாக வலியுறுத்துகின்றோம்.
4. 13-ஆம் சட்டத் திருத்த செயலாக்கம்
13 ஆம் சட்டத்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தங்களிடம் வேண்டுகின்றோம். அதற்கு மேலாக தமிழ் முஸ்லிம் சமூகத்தை பிரதிபடுத்தி அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருக்கவே நாங்கள் விரும்புகின்றோம். அரசாங்கத்துக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை மாறாக அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டி எழுப்புவதே எமது நாட்டின் மீளமைப்புக்கு ஒரே வழி என நம்புகின்றோம். மேலும் சுகாதாரத் துறைக்கான மீள் கட்டுமானத்தை வலியுறுத்துவதோடு மாகாணத்துக்குரிய அரசாங்க வைத்தியசாலைகள் மீளமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவ்வாறே ஏனைய திணைக்களங்களும் மீள கட்டமைக்கப்பட வேண்டும் என விரும்புகின்றோம்.
5. வடக்கு கிழக்கிற்கான போலீஸ் அதிகாரம்
எங்களது வடக்கு கிழக்கு காண போலீஸ் அதிகாரம் தமிழ் பேசும் காவல்துறை உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என விரும்புகின்றோம். இவை போதை வஸ்து மற்றும் சமூகப் பிறழ்வு சம்பந்தமான எதிரான கட்டமைப்புகளை வலுப்படுத்தும் என நம்புகின்றோம்.
6. இலங்கை திருநாட்டில் மூவின மக்களின் சமாதானம்
எமது இலங்கை திருநாட்டில் கடந்த காலத்தை போன்று அல்லாது மோவின மக்களை ஒன்றாக வாழ ஒரு கட்டமைப்பை விரும்புகின்றோம். முக்கியமாக முஸ்லிம் மக்களுடைய கலாச்சாரத்தை பேணும் வகையில் அவர்கள் தனித்துவத்தை பேணும் வகையில் ஒரு இன சமாதானம் கட்டியமைக்கப்பட வேண்டும். மக்களுக்கான சமத்துவமான இன மத பேதமற்ற இலங்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மேற்படி கோரிக்கைகளானது தமிழ் முஸ்லிம் மக்களின் ஒன்றுபட்ட கோரிக்கையாக அமையும். மேற்படி கோரிக்கைகளுக்கான தங்களுடைய வாக்குறுதியானது தங்களுக்கு மேலும் பலமானதாக இருக்கும் என நம்புகின்றோம். இவ் வாக்குறுதிகளால் தங்களுடைய சிங்கள சமூகத்தின் எதிர்பார்ப்புகள் எவ்வகையிலும் குறைக்கப்படாது என நம்புகின்றோம்.
இவ் வாக்குறுதிகள் மூவின மக்களுக்கும் இடையேயான பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுக்கூட்டும் என நம்புகின்றோம்.
மேலும் தற்போதைய கோரிக்கைகளானது எதிர்காலத்தில் அர்த்தமுள்ளதாக மாற்றப்படலாம் என கருதுகிறோம்.
இவ்வகையான சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கியமைக்காக மீண்டும் ஒரு தடவை மதிப்பு மிகவும் ஜனாதிபதிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு வரலாற்று மிக்க ஒரு வெற்றியை தரும் என நாங்கள் உங்களை வாழ்த்த விரும்புகின்றோம்.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா.
தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கானவன்.
https://www.facebook.com/eagle.feder.3/videos/1070645981347615