YouTube பக்கம் தொடங்கிய சில மணி நேரத்தில் சாதனை படைத்த ரொனால்டோ

போர்ச்சுகலைச் சேர்ந்த காற்பந்துப் பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) YouTube பக்கம் தொடங்கிய சில மணி நேரத்தில் சாதனை படைத்திருக்கிறார்.

உலகிலேயே ஆகக் குறுகிய நேரத்தில் 1 மில்லியன் பேர் ரொனால்டோவின் YouTube பக்கத்தைப் பின்பற்றியுள்ளனர்.

இது YouTube வரலாற்றில் ஒரு சாதனை.

இதுவரை சுமார் 25 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரை YouTubeஇல் பின்பற்றுகிறார்கள்.

சமூகத் தளத்தில் ஆக அதிகமானோர் பின்பற்றும் பிரபலங்களில் ரொனால்டோவும் ஒருவர்.

சமூகத் தளங்களில் அவரைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை:

Instagram: 636 மில்லியன்
‘X’: 112.5 மில்லியன்
Facebook: 170 மில்லியன்

ரொனால்டோ தாம் படைத்த சாதனை குறித்துச் சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

“இது எனது குடும்பத்துக்குக் கிடைத்த அன்பளிப்பு. அனைவருக்கும் நன்றி,” என்று அவர் பதிவில் குறிப்பிட்டார்.
https://www.instagram.com/reel/C-8pFJHgfg3/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Leave A Reply

Your email address will not be published.