ஊடகவியளாளர் சமுதித்தவை கொல்ல பாதாள உலகிற்கு உத்தரவு.. பலப்படுத்தப்பட்டது போலீஸ் பாதுகாப்பு..!

பாதாள உலகக் குழுவொன்று தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலகக் குழுவொன்று இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நாமல் குமார இணையத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே ஆயுதம் தரித்த பொலிசார் , சமுதித்த சமரவிக்ரமவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.