அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் கேள்விகளை கேட்கும் ஊடகங்களை, புறக்கணிக்க திசைகாட்டி முடிவு
தேசிய மக்கள் சக்தியை , பல முக்கிய ஊடகங்கள் மற்றும் பல இணைய ஊடகங்கள் திட்டமிட்டு தமது கட்சியினரை பேட்டி என அழைத்து , அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி வருவதால் , அப்படியான சேனல்களை தவிர்க்க முடிவு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
சில முக்கிய இலத்திரனியல் ஊடகங்கள் வேண்டுமென்றே தேசிய மக்கள் சக்தியைத் தாக்கி, தங்கள் கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்த திட்டமிட்டு வருவதால், அப்படியான ஊடகங்களின் உரையாடல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதில்லை என கட்சி முடிவு செய்துள்ளது.
மேலும், கட்சியின் கொள்கைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய, அந்த உரையாடல்களால் கடுமையான முரண்பாடுகளை எதிர்கொண்டுள்ளமையால் , பல இணைய சேனல்களுடன் உரையாடல்களில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை கட்சி எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, தங்களுக்கு விசுவாசமான இணையதள சேனல்களை மட்டும் தேர்வு செய்து உரையாடல்களில் பங்கேற்க வேண்டும் என்ற கருத்து கட்சி வட்டாரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தர்க்கரீதியாகவும் சரியான பதிலை அக்கட்சியின் தொண்டர்கள் அளிக்க வேண்டும் என ஜனதா விமுக்தி பெரமுனாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல மூத்த தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.