நிபந்தனைகளை திருத்த முடியாது IMF : ஒப்பந்தத்தில் இருந்து விலகலாம்
சர்வதேச நாணய நிதியத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை திருத்துவதற்கு அனுமதி கோரிய போதும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகின்றார்.
மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற புதிய மக்கள் முன்னணி கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறினால் பணம் கிடைக்காது.
அந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வது என்பது தற்போதைய நிலைமைகளை விட்டு விலகுவதாகும்.
நாங்கள் இன்னும் மென்மையான விதிமுறைகளைக் கேட்டோம். ஆனால் அப்படிக் கிடைக்கவில்லை.
ஆனால் இந்த சலுகைகள் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்றும் திறன் நம்மிடம் உள்ளது.
ஆனால் இவற்றை மாற்ற முயன்றால் கிடைக்கும் பணத்தை இழக்க நேரிடும்.
பிறகு நாம் வரிசைகளின் சகாப்தத்திற்கு செல்ல வேண்டும்.’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.