போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகம் : 15 வயது மாணவர்கள் உட்பட 113 பேர் கைது.
சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிரடி நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 113 பேர் கைது செய்யப்பட்டனர்.
இம்மாதம் 12ஆம் தேதி முதல் இன்று வரை சோதனைகள் நடத்தப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள்:
– 9.8 கிலோகிராம் போதைமிகு அபின் (heroin)
– 3.3 கிலோகிராம் ஐஸ் (‘Ice’)
– 620 கிராம் கஞ்சா (cannabis)
– 72 கிராம் கெட்டமைன் (ketamine)
– 171 கிராம் methamphetamine மாத்திரைகள்
– 74 மாத்திரைகள்
– 48 கிராம் எக்ஸ்டசி (‘Ecstasy’) மாத்திரைகள்
– 4,404 எரிமின்-5 (Erimin-5) மாத்திரைகள்
– 11 LSD (lysergic acid diethylamide) ஒட்டுவில்லைகள்
– GHB (gamma-hydroxybutyrate) திரவம் என்று சந்தேகிக்கப்படும் 5 போத்தல்கள்
– 5 methadone போத்தல்கள்
அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1.54 மில்லியன் வெள்ளி என்று மதிப்பிடப்படுகிறது.
நடவடிக்கையில் பிடிபட்ட ஆக இளையவருக்கு வயது 15. விசாரணையில் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தில் மற்றொரு 15 வயது இளையர் கைது செய்யப்பட்டார். இருவரும் மாணவர்கள்.
ஆக அதிகமான அளவில் போதைப்பொருள் வைத்திருந்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 67 வயது ஆடவர்.
அவரிடம் சுமார் 9.5 கிலோகிராம் போதைமிகு அபின் (heroin),
2.6 கிலோகிராம் ஐஸ் (‘Ice’), 4,182 எரிமின்-5 (Erimin-5) மாத்திரைகள், 171 கிராம் methamphetamine மாத்திரைகள், 18 கிராம் of எக்ஸ்டசி (‘Ecstasy’) மாத்திரைகள், 5 methadone போத்தல்கள், 25,240.50 வெள்ளி ரொக்கம் இருந்தன.
அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1.4 மில்லியன் வெள்ளி.
புக்கிட் தீமா (Bukit Timah), கிம் மோ (Ghim Moh), ஹவ்காங் (Hougang), மார்சிலிங் (Marsiling), மவுண்ட்பேட்டன் (Mountbatten), தெம்பனிஸ் (Tampines) வட்டாரங்களில் அதிரடி நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
விசாரணை நடைபெறுகிறது.