ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் : ரணில் விக்கிரமசிங்க.

மக்களின் வாக்களிக்கும் உரிமையும், வாழும் உரிமையும் மதிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு காலத்தை விரயமாக்கி இருந்தால் , நாட்டின் பொருளாதாரம் மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்

பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஏன் வழக்கு தொடரவில்லை?

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலும், அதனைத் தொடர்ந்து மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் நடைபெறும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டிய போதிலும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அந்த நேரத்தை ஒதுக்கி தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு வருந்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தில் ஒவ்வொரு மணித்தியாலமும் பெறுமதி வாய்ந்தது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , அந்த நேரத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதற்கு செலவிட்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் இன்று ஸ்திரமான நிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹரகம இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (22) பிற்பகல் நடைபெற்ற நவ மக்கள் முன்னணி கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு, மருந்து, உணவு மற்றும் எரிபொருள் இன்றி மக்களின் அன்றாட வாழ்க்கையை தொடர முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணித்ததாகவும், தேவைப்பட்டால் எதிர்காலத்திலும் அதனை மேற்கொள்ள அதற்கான எந்த முடிவை எடுப்பதாகவும் தெரிவித்தார். .

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதற்குத் தேவையான நிதி ஏற்கனவே கிடைத்துள்ளது எனவும் , அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலையும் அதன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் நடத்தலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.