டி. எஸ் சேனாநாயக்கவின் பேரன் , ருக்மன் சேனாநாயக்க காலமானார்

இலங்கையின் முதல் பிரதமர் டி. எஸ் சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 76.
ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் ஆவார்.
1973ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும் சில காலம் பணியாற்றினார்.