ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சவாலாக , இலங்கையில் புதிய விமான சேவை ஆரம்பம்..

Air Ceilao என்ற மற்றொரு விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை வர்த்தகர் ஒருவர் தயாராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப கட்டத்தில் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் விமானங்களைத் தொடங்குவதும், பின்னர் ஐரோப்பாவுக்குச் செல்வதும் அவர்களின் நோக்கமாகும்.
அவர்கள் தற்போது போயிங் விமானங்களை கொள்வனவு செய்வது குறித்து கலந்துரையாடி வருவதாகவும், இலங்கையில் விமான சேவையை நிறுவுவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து செயற்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சவாலாக அமையும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.