ஒன்றிணைந்து வெற்றி பெற பிரிந்து போராட்டம்.. பலமான அமைச்சர் ஒருவரது மகள் முன்னணியில்..
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்காக ஒன்றிணைந்துள்ள பல குழுக்கள் பல அணிகளாக பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தக் குழுக்களுக்கிடையில் போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், மற்ற அனைத்துக் தரப்புகளையும் பின்தள்ளி, பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரின் மகளை முன்னேற்றும் நடவடிக்கையும் இடம்பெற்று வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் விசேட அவதானம் செலுத்தியுள்ளதுடன், தனிப்பட்ட முக்கியத்துவத்துக்காக இந்த நேரத்தில் எவரும் செயற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் கட்சி நிர்வாகக் குழுவில் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை,அதிக வாக்காளர்களைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் பேரணியின் பின்னர் , கடவத்தை பேரணியியின் பின்னர் பிரசாரம் செய்வது தொடர்பில் முக்கிய செயற்பாடுகள் எதுவும் இடம்பெறாமை தொடர்பில் ஒருவரையொருவர் கை காட்டி விட்டு, தப்பிக் கொள்ளும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகின்றது.