உண்மையை சொல்லுங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டோம் : சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் தொடர்பு பேணியவர்கள் சிலர் பொய்யான தகவல்களை வழங்குவதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதென சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சிலர் மதுபான சாலைகள் மற்றும் சட்டவிரோத இடங்களுக்கு சென்றதை கூறினால் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்ற அச்சத்தில் தகவல்களை மூடி மறைப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் தற்போது பாதுகாப்பு பிரிவுக்கு தேவையாக இருப்பது கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது எனவும் அதனால் சட்டவிரோத இடங்களுக்கு சென்றதாகக் கூறினாலும் வழக்கு தாக்கல் செய்யப்பட மாட்டாதெனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என பொலிஸ் திணைக்களம் உறுதியளிப்பதாவும் வௌியிடப்படும் தகவல்களின் இரகசியதன்மை பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.