மக்களின் துன்பத்தை அறியாதவர்களை , மக்கள் தேர்தலில் துடைத்தெறிய வேண்டும் : ரணில் விக்கிரமசிங்க.
மக்களை வாழ வைப்பது அடிப்படை உரிமை மீறல் அல்ல என்றும் மக்களுக்காக எழுந்து நின்று துன்பங்களை அனுபவிக்கத் தயார் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (24) மட்டக்களப்பில் தெரிவித்தார்.
மக்களுக்கு உணவு வழங்கி அவர்களின் துன்பங்களில் இருந்து விடுவிப்பதே ஜனாதிபதி என்ற ரீதியில் தனது கடமை என தெரிவித்த ஜனாதிபதி, ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு அந்த பொறுப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற இயலும் ஶ்ரீலங்கா “Can Sri Lanka” ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகில் வேறு எந்த நாடும் இவ்வளவு விரைவாக வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, ரஞ்சித் மத்தும பண்டார, ஹரிணி அமரசூரிய போன்றவர்கள் இந்த முறையை நிறுத்த விரும்புவதாக தெரிவித்த ஜனாதிபதி, இவ்வாறானவர்களை தேர்தலின் போது துடைத்தழிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதே தனது ஒரே நோக்கம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் எரிவாயு சிலிண்டருக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,.
இந்த மேடையில் என்னுடைய ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். 12-13 வருடங்களில் ரோயல் கல்லூரியில் கற்பித்த சிவலிங்கம் அவர்கள், 1961 இல் எனக்குக் கற்பித்தார். அவர் எனக்கு மட்டுமல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் , சபாநாயகர் அநுர பண்டாரநாயக்காவுக்கும், மலிக் சமரவிக்ரமுக்கும் கற்பித்தார். அவர் கிட்டத்தட்ட முழு அமைச்சரவைக்கும் கற்பித்தார்.எனவெ நாட்டை மீட்டெடுத்த பெருமை அவரையும் சாரும்.
அப்போது எங்களுக்கு ராயல் கல்லூரியில் ஏதென்ஸ் பேரரசரின் வரலாறு பற்றி கற்பிக்கப்பட்டது. ஏதோ ஒரு கோழைத்தனமான செயலின் மூலம் நம்முடன் கஷ்டப்படும் மற்றவர்களை கைவிட்டு அந்த நகருக்கு அவமானத்தை ஏற்படுத்தாத நிலை என்பது அந்த வரலாற்றுக் கதையில் சொல்லப்படுகிறது.
அதேபோல 2022-ல் வேறு எரும் இல்லாதபோது அப்படியான ஒரு சவாலை ஏற்றுக்கொண்டேன், ஏனென்றால் அந்தப் பயிற்சி என்னிடம் இருந்தது. அது உங்கள் உரிமைகளுக்காக போராடுவது. நீங்கள் அதனால் நிம்மதி அடைவீர்கள். இளைஞர்களுக்கு ஒரு எதிர்காலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பெறுவதற்கும், நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும் இக்கட்டான காலங்களில் சவாலை ஏற்றுக்கொண்டேன். எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்த ஆசிரியர் இல்லை. அதனால்தான் அவர் அனுபவம் இல்லாமல் ஓடிவிட்டார், அது சரி என்றால், மக்களைக் காக்க வேண்டிய கடமை அவருக்கு இருந்த போது , மக்கள் தவிக்கும் போது அவர் ஓடி ஒளிந்து கொண்டார்.
கியுகள் பற்றியோ, மக்களின் பசியைப் பற்றியோ அவர் சிந்திக்கவில்லை. மக்கள் கஷ்டப்படும்போது ஓடிவிட்டார். ஓடி பாரிஸ் ஒலிம்பிக்கில்தான் முடித்தார். எனது நண்பர் அனுரகுமாரவையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்த அமைச்சர்கள் என்னுடன் நின்றார்கள். இவர்களோடு IMF க்குச் சென்றோம்.
கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. உள்நாட்டில் கடன் வாங்குவது குறைவாகவே இருந்தது. செலவினங்களுக்கான வருமானத்தைக் கண்டறிய VATஐ அதிகரிக்க வேண்டியிருந்தது. வருமானம் குறைவாக இருந்தது. இவை எளிதான முடிவுகள் அல்ல. இறுதியில் அந்தச் சுமையை மக்கள் ஏற்றுக்கொண்டனர். உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என்றார் ரணில் விக்கிரமசிங்க .