பஸ் கெமுனு மற்றும் 10 போக்குவரத்து சங்கங்கள் ரணிலோடு இணைந்தன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட 10 போக்குவரத்து சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன.
கொழும்பு ஜனாதிபதியின் தேர்தல் காரியாலயத்தில் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
மீண்டும் எரிபொருள் வரிசையை விரும்பவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மீட்பதற்கு ஜனாதிபதி செயற்பட்ட விதத்தை பாராட்டுவதாகவும் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் உரிமையாளர்கள் சங்கம், பொதுஜன பெரமுன பஸ் சங்கம், கொள்கலன் போக்குவரத்து சங்கம், அலுவலக போக்குவரத்து சங்கம், அகில இலங்கை சாரதிகள் சங்கம், அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அகில இலங்கை பாடசாலை பஸ் சங்கம், நிலைய அதிபர்கள் சங்கம், டாக்சி முச்சக்கரவண்டி தேசிய சங்க தொழில் வல்லுநர்கள் ஆகியோர் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.