பாலத்தில் மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்.

மட்டக்களப்பில் பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் – பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில் அதனைச் செலுத்தியவரே மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழுகாமம், பட்டாரபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
பொதுமக்களின் உதவியுடன் நீரிழ் மூழ்கி உயிரிழந்தவரையும், மோட்டார் சைக்கிளையும் மீட்ட பொலிஸார், உயிரிழந்தவுடன் பயணித்த இரண்டு நண்பர்களையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.