திலித்தின் விருந்தை நிறுத்திய தேர்தல் ஆணையம்.. அனைத்து உணவுக்கும் சீல் வைத்து, சாராயங்களை போலீசார் எடுத்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவினால் நடத்தப்பட்ட இரவு விருந்தொன்றை தேர்தல் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.

நேற்று அனுராதபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், திலித் ஜயவீர தலைமையில் நடைபெற்ற கல்வியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதிதிகளுக்காக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அநுராதபுரம் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாருடன் அதிகாரிகள் குழுவொன்று வந்து ஹோட்டலில் விருந்துக்காக தயாரிக்கப்பட்ட உணவை சீல் வைத்துள்ளனர்.

விருந்தினர்களுக்கு வழங்கப்படவிருந்த மது போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.