ஜெர்மனி கத்திக்குத்து – ரத்தக் கறையுடன் சரணடைந்த ஆடவர்.

ஜெர்மனியின் சோலிங்கன் நகரில் கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் 26 வயது ஆடவர் சரணடைந்துள்ளார்.
அவரிடம் விசாரணை தொடர்கிறது.
ரத்தக் கறை படிந்த ஆடையுடன் ஆடவர் காவல்துறையிடம் சரணடைந்ததாகத் தெரிகிறது.
சிரியாவைச் சேர்ந்த அந்த ஆடவர், 2022இல் ஜெர்மனிக்கு வந்ததாகக் காவல்துறை கூறியது.
கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்;
8 பேர் காயமடைந்தனர்.
சந்தேகத்துக்குரிய ஒருவரைக் காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
சோலிங்கன் நகரில் அடைக்கலம் நாடுவோர் நிலையத்தில் தங்கியிருந்த இன்னொருவர் சிறப்புப் படையின் சோதனையில் பிடிபட்டார்.
15 வயதுப் பையனும் கைது செய்யப்பட்டான்.
தாக்குதல் திட்டம் அவனுக்கு முன்பே தெரியும் என்று சொல்லப்படுகிறது.
முன்னதாக, ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
ஆனால் கத்திக்குத்து குறித்து வேறு எந்த ஆதாரத்தையும் அது வெளியிடவில்லை.
தாக்குதல் நடத்தியவருக்கும் அந்த அமைப்புக்கும் உள்ள தொடர்பு தெளிவாகத் தெரியவில்லை.
அது பற்றிய புலனாய்வும் தொடர்கிறது.