பதியுதீனை தனித்து விட்டு கட்சியின் அதிகமானோர் ரணிலுடன் இணைவு.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ரிஷாத் பதியுதீன் எடுத்த தீர்மானத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் அப்துல்லா மஹ்ரூப் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அந்த தீர்மானத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும், தனது ஆதரவாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தொண்ணூற்றைந்து வீதமே ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பில் கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்திய போதிலும் கட்சியின் உயர்பீடம் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவர் ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் பொருளாதார அராஜக நிலைக்கு தள்ளப்படும் எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் ஏற்கனவே ஜனாதிபதிக்கு ஆதரவாக ஒன்றிணைந்துள்ளனர்.