சுவிட்ஸர்லந்தின் அழகிய ஏரிகள்…உள்ளே?

சுவிட்ஸர்லந்தில் பல அழகிய ஏரிகள் உள்ளன…
அவற்றுக்குள் என்ன இருக்கிறது என்று தெரியுமா?
பல ஆண்டுகளாக அந்நாட்டின் ராணுவம் பழைய துப்பாக்கி ரவை, வெடிமருந்துகளை அப்புறப்படுத்த ஏரிகளைப் பயன்படுத்திவருவதாக BBC தெரிவித்தது.
அவற்றை அங்கு பாதுகாப்பாக அப்புறப்படுத்தலாம் என்று ராணுவம் நம்பியது.
Lucerne ஏரியில் மட்டும் 3,3000 டன் அளவு வெடிமருந்து இருக்கிறது. Neuchatel ஏரியில் 4,500 டன் அளவு வெடிமருந்து உள்ளதாக BBC தெரிவித்தது.
அவை 6 மீட்டர் முதல் 220 மீட்டர் ஆழத்தில் உள்ளன.
அவற்றை வெளியேற்றத் தரப்படும் ஆகச்சிறந்த யோசனைக்குப் பரிசாக 50,000 சுவிஸ் பிராங்க்ஸ் (சுமார் 76,000 வெள்ளி) தரப்போவதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு அறிவித்தது.
பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை அது எதிர்பார்க்கிறது.
தீர்வுகளைச் செயல்படுத்தும் பணிகளுக்குப் பில்லியன் கணக்கில் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.