ரணிலுடன் மற்றுமொரு மலையக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சங்கமம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் என்பனவற்றின் ஆதரவு தொடர்பிலான நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக நுவரெலியா கட்சி அலுவலகத்தில் (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த சுப்பையா சதாசிவம் ,
இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது நாடு அதலபாதாளத்தில் வீழ்ந்ததை நாம் மறக்கவில்லை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்த போது படிப்படியாக மீளக் கட்டியெழுப்பியுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதாரத்தைப் போன்று நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் புரிந்து கொண்ட அறிவார்ந்த தலைவர் என ரணில் விக்கிரமசிங்கவை அறிமுகப்படுத்தலாம்.
சர்வதேச உறவுகளைப் பற்றி பேசும் போது, சக்தி வாய்ந்த நாடுகளின் உதவியை பெற்று, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே நபரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உதவ அனைத்து சக்தி வாய்ந்த நாடுகளும் தயாராக உள்ளன.
ஜனதா விமுக்தி பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் பல நாடுகளுக்குச் சென்றார், அவர் நாடுகளுக்கு உலாவச் சென்றார் என்று கூறுவதில் பயனில்லை, நாம் அனைவரும் அதைச் செய்யலாம், அவர்களால் அந்த நாட்டில் உள்ள இராஜதந்திரிகளுடன் உறவைப் பேண முடியாது,அதை செய்ய முடிந்த ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே.
ஜே.வி.பி வாக்களிப்பில் வெற்றி பெற்றாலும் அவர்களின் கடந்த கால இருண்ட அனுபவங்கள் எங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது.
1970களில், தேசிய அடையாள அட்டைகளைத் பறித்து என்ன செய்தார்கள் என்பதை நாங்கள் எங்கள் கண்களால் பார்த்தோம், அவற்றை நாங்கள் நன்றாக நினைவில் வைத்திருக்கிறோம்.
மேலும், ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீர எனது சிறந்த நண்பர், ஆனால் சொல்ல வேண்டியதை நாம் சொல்ல வேண்டும்.
இன்று என்னதான் விசித்திரக் கதைகளைச் சொன்னாலும், அன்று இருந்தவர்கள்தான் இன்று ஜே.வி.பி.யில் இருக்கிறார்கள், அவர்களின் குணாதிசயங்களில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
காடு மாறினாலும் புலியின் புள்ளிகள் மாறாது என்பது நமக்கு நன்றாகத் தெரியும் என்பதால் கடந்த காலத்தில் செய்ததையே இன்றும் செய்யலாம் என்று நினைக்கிறோம்.