ஜனாதிபதி தேர்தல் சமூக ஊடக கருத்துக்கணிப்பை நிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு முயற்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் மற்றும் கணக்கெடுப்புகளை நிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வாரம் நடைபெறும் ஆணைக்குழு கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடுகின்றார்.
சில வேட்பாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி பாரபட்சம் காட்டுவதாகக் கூறும் தலைவர், இது தொடர்பான கருத்துக் கணிப்புகளை யார் நடத்துகிறார்கள் என்பதை அடையாளம் காண இந்த நாட்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறார்.
அப்போது கருத்துக் கணிப்புகளை நிறுத்தும் முறை குறித்து ஆலோசிக்கப்படும், ஆனால் மின்னணு அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது எளிது, ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது எளிதான காரியம் அல்ல என்றார்.