ஏழை ரணில் வாழ மானியம் வழங்குவேன் – கோடீஸ்வர திலித்
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் மாதாந்த வருமானத்தைப் பார்க்கும் போது தமக்கு மனவேதனை ஏற்பட்டதாக சர்வ ஜன பலய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மௌபிமேயின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
சாமானியர்களால் வாழ முடியாத அளவுக்கு அவர்கள் வாழ்வது வியப்பளிக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
அவர்கள் அனைவரும் கறுப்புப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி என்றும், அவர்கள் எவரும் வருமான வரியாக ஒரு செப்பு பைசா கூட செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெலவத்தையில் இருந்தாலும், கொழும்பு 7லில் இருந்தாலும், புறக்கோட்டையில் இருந்தாலும், அந்த மக்கள் அனைவரும் கறுப்புப் பொருளாதாரத்தில் அங்கம் வகிக்கும் திருடர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அவருக்கு வாழ்வாதாரத்திற்கான பணிக்கொடை வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அனுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.