வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

வவுனியாவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலனிகம கிராம வயல் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.