மலேசியக் கடற்படைக் கப்பல் ஜொகூருக்கு அப்பால் மூழ்கியது :கப்பல்கள் மூழ்குவதற்கான காரணங்கள்
லேசியக் கடற்படைக் கப்பல் ஜொகூர் கரைக்கு அப்பால் மூழ்கியுள்ளது.
அதை மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன.
கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நேற்று (25 ஆகஸ்ட்) மாலை 4 மணியளவில் KD Pendekar என்ற அந்தக் கடற்படைக் கப்பல் மூழ்கியது.
அதில் இருந்த 39 பேரும் கப்பல் முழுமையாக மூழ்குவதற்கு முன்பு காப்பாற்றப்பட்டனர்.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நீருக்கு அடியில் இருந்த அடையாளம் தெரியாத பொருள் மீது கப்பல் மோதியதாக நம்பப்படுகிறது.
கடலுக்கு அடியில் இருந்த அடையாளம் தெரியாத பொருள் மீது கப்பல் மோதியதாகக் கூறப்படுகிறது.
கப்பல் மூழ்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன..
அவற்றுள் சில….
1. வேறு கப்பலுடன் அல்லது தெரியாத பொருள் மீது மோதினால்…
கடலில் வேறு கப்பலுடன் அல்லது அடையாளம் தெரியாத பொருளுடன் மோதும்போது, கப்பல் அதன் நிலைத்தன்மையை இழந்து, மூழ்கலாம்.
2. கடும் வானிலை
புயல் போன்ற மோசமான வானிலையின் காரணமாகக் கடலில் கொந்தளிப்பு, பெரிய அலைகள் ஏற்படலாம். அது கப்பலை மூழ்கடிக்கக்கூடும்.
3. களைப்பு, அலட்சியம், பிழை
கப்பலை மேற்பார்வையிடப் போதுமான ஊழியர்கள் இல்லை; ஊழியர்களுக்குக் களைப்பு, அலட்சியம்…இவ்வனைத்தும் கப்பல் மூழ்கிவிடக் காரணமாக அமையலாம்.
4. பழுதடைந்த சாதனங்களைப் பயன்படுத்தினால் ஆபத்து
பனிமூட்டம் இருந்தால் திறந்த கடலில் ஒழுங்காகப் பார்க்க இயலாது. அப்போது முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு நவீன சாதனங்கள் தேவைப்படும். பழுதடைந்த சாதனங்களைப் பயன்படுத்தினால் அது ஆபத்தை விளைவிக்கலாம்.
5. கப்பலை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை
கப்பலை ஒழுங்காகப் பராமரிக்காவிட்டால், அது துருப்பிடிக்கலாம். பாதிப்படையலாம். அதனால் விபத்துகள் ஏற்படலாம்; கப்பல்கள் மூழ்கலாம்.