16 மணி நேரம் , ரோம் நகரிலிருந்து பெர்த்துக்கு சேதமடைந்த இறக்கையுடன் பறந்த விமானம்

இத்தாலியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 16 மணி நேரப் பயணம்…

விமானத்தின் டயரின் ஒரு பகுதி கழன்றுவிட்டது…

கழன்ற டயர் விமானத்தின் இறக்கையைச் சேதமடையச் செய்தது….

ரோம் நகரிலிருந்து பெர்த்துக்குச் சென்ற Qantas விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

நடந்ததை அறியாத விமானச் சிப்பந்திகளும் விமானியும் அதற்குப் பிறகே விமானத்துக்கு ஏற்பட்ட சேதத்தை அறிந்தனர்.

போயிங் ரக 787 Dreamliner விமானம் ரோமிலிருந்து புறப்பட்டபோது டயர் கழன்றிருக்கலாம் என்று கூறப்பட்டது.

Qantas நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.