காஸா சண்டை நிறுத்தப் பேச்சில் முன்னேற்றம் இல்லை

காஸா சண்டை நிறுத்தப் பேச்சில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று எகிப்தின் பாதுகாப்பு அதிகாரிகள் Reuters செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

காஸாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான Philadelphi பாதையிலும் காஸாவுக்குக் குறுக்கே செல்லும் Netzarim பாதையிலும் இஸ்ரேலியப் படைகளை மீட்கவும் இஸ்ரேலியப் பிணையாளிகளை விடுவிக்கவும் பரிந்துரைகள் வைக்கப்பட்டன.

இஸ்ரேலின் நிபந்தனைகளை ஹமாஸ் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை…ஹமாஸின் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை.

10 மாதமாகத் தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அண்மை மாதங்களில் சமரசப் பேச்சுவார்த்தை பலமுறை நடத்தப்பட்டது.

அது இம்முறையும் தோல்வியில் முடிந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

எகிப்தில் உள்ள சமரசப் பேச்சாளர்கள் சண்டை நிறுத்த உடன்பாட்டுக்கான முயற்சிகளைத் தொடர்வதாக அமெரிக்கா சொன்னது.

மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க காஸா போர் நிறுத்த உடன்பாடு உதவும் என்று அது நம்பிக்கை தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.